News Just In

11/10/2019 08:29:00 AM

தேர்தல் கூட்டத்திற்குச் சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்த யுவதியொருவர் பாலியல் துஷ்பிரோயகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று மாவனல்லை ஹேமத்தகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக குறித்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட இடத்திலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி டீ.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தளுக்கு அமைய ஆதாரங்களை கண்டுபிடிக்க தவறியதற்காக பிரதி பொலிஸ் அதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments: