News Just In

11/08/2019 08:41:00 AM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் வியாழக்கிழமை (07.11.2019) டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் நிதியை தேர்தல் செலவுகளுக்கு முறைகேடான வகையில் பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு படையினருக்காக வசூலிக்கப்பட்ட பணம் டிரம்ப் தேர்தல் செலவுக்கு 2016-இல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று தீர்ப்பளித்த நீதிபதி சேலியன் ஸ்கார்புலா இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்தார்.

அபராதமாக செலுத்தும் பணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: