அண்மையில் 6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கிழக்கு மாகாண ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார். இதற்கான நியமனத்தை அவர் இவ்வாரம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
வடக்கு மற்றும் தென் மாகாணத்திற்கான ஆளுநர்கள் குறித்த தீர்மானம் நாளை திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: