
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று (11.11.2019 ) திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநில, உள்ளூர் தலைவர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனும் மையக்கருத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் உரையாற்றியதுடன், எவ்வாறு அன்னம் சின்னத்திற்கு வாக்களிப்பது என்கிற விளக்கத்தையும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.
No comments: