News Just In

11/07/2019 03:22:00 PM

மட்டக்களப்பில் தேர்தல் உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 428 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்குசீட்டுக்களும் உபகரணங்களுடன் உத்தியோகத்தர்களை கொண்டு செல்வதற்காக மொத்தம் 326 வாகனங்கள் தேர்தல் கடமைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்களிடையே இருந்து 138 வாகனங்களும் கொழும்பு திணைக்களங்களில் இருந்து 79 வாகனங்களும் தனியாரிடமிருந்து 59 வாகனங்களும் இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து 50 பஸ்வண்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலகர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
தேர்தல் காலங்களில் போக்குவரத்திற்கு எவ்வித இடையுறுகளும் ஏற்படாத வகையிலும் அலுவலகர்கள் உரிய நேரத்திற்கு தங்களின் வாக்கெடுநிலயங்களுக்கு கொண்டு செல்வதற்கான முன்னாயத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று மக்களின் பொது போக்குவரத்திற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகும் குறிப்பிட்டார்.

No comments: