2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியை நோக்காககொண்டு மகளிர் மாகாண கிரிக்கட் போட்டியினை நடாத்த இலங்கை கிரிக்கட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. குறித்த போட்டிகள் நவம்பர் 24 தொடக்கம் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இப்போட்டியில் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு, காலி, கண்டி, தம்புளை ஆகிய நான்கு அணிகள் பங்குகொள்கின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.
அனைத்துப் போட்டிகளும் கொழும்பு எஸ். எஸ். சீ. மைதானத்தில் காலையில் ஒரு போட்டியும், பிற்பகலில் ஒரு போட்டியுமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த மகளிர் மாகாண கிரிக்கட் போட்டியானது இதற்கான பயிற்சிப் போட்டியாக நடாத்தப்படவுள்ளது.
11/15/2019 08:26:00 AM
Home
/
கிரிக்கட்
/
விளையாட்டு
/
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மகளிர் மாகாண கிரிக்கட் போட்டி
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மகளிர் மாகாண கிரிக்கட் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: