தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் தாம் விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெனான்டோவும் தனது அமைச்சுப்பதவியில் இருந்தும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகிக்கும் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். எனது பதவிக்காலத்தில் ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.





No comments: