News Just In

11/11/2019 06:36:00 PM

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான கலந்துரையாடல்

யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் ஜனாதிபதித் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்ற வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான கலந்துரையாடல் இன்று (11.11.2019) காலை 9 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளர் கலந்துகொண்டார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் மாவட்ட முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டுமெனவும் அதற்காக வாக்கு எண்ணும் அலுவலகர்கள் மனித வலுவை திட்டமிட்டு பயன்படுத்தல், வாக்கெண்ணும் படிவங்கள் மற்றும் உறைகளை ஒழுங்காக வைத்திருத்தல், வாக்களிப்பு முறைகள் முதலான விடயங்கள் குறிப்பிடப்பட்டது.

No comments: