News Just In

11/07/2019 09:43:00 AM

இன்று தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி சந்தர்ப்பம்!

ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே தபால் மூல வாக்குகளை செலுத்தத் தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று வியாழக்கிழமை (07.11.2019) அந்தந்த மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியுமென்றும் தபால் மூல வாக்களிப்பின் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 01, 04, 05 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது. இதன்படி தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி தினம் இன்றாகும்.

தபால் மூல வாக்குகளை செலுத்தத் தவறிய சகல அரச ஊழியர்களும் இன்று காலை 07 மணி தொடக்கம் பிற்பகல் 04 மணி வரை தபால் மூல வாக்குகளை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 59 ஆயிரத்து 317 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: