News Just In

11/07/2019 05:36:00 PM

வளி மாசடைதலைக் கட்டுப்படுத்தக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி நகரில் வளி மாசடைவை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்களை எடுக்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரையறைக்கும் அப்பால் டெல்லி நகரின் வளிமாசடைவு 20 மடங்கால் அதிகரித்துள்ளமையால் மக்கள் சுவாசக் கோளாறை எதிர்கொள்வதுடன் கூடுதலாக சிறுவர்களே பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

புதுடில்லியில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வளி மாசடைவால் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: