News Just In

11/10/2026 09:00:00 AM

அனிருத் - காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின், ரஜினி கிரீஸ் நாட்டுக்கு பயணம்

அனிருத் - காவ்யா மாறன் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின், ரஜினி கிரீஸ் நாட்டுக்கு பயணம்



அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் பங்கேற்பதற்காக கிரீஸ் நாட்டுக்கு குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த்.

 பிரபல இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் பிரபல தொழிலதிபர் காவ்யா கலாநிதி மாறன் ஆகியோரின் திருமண விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் கிரீஸ் நாட்​டுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றார்.

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இசையமைப்​பாளர்​களுள் ஒரு​வர் அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வரும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஐபிஎல் கிரிக்கெட் அணி​யின் இணை உரிமையாளர்​களுள் ஒரு​வ​ருமான காவ்யா கலாநிதி மாறன் ஆகியோரின் திரு​மணம் கிரீஸ் நாட்​டில் இன்றும், நாளை​யும் (நவ.10, 11) நடை​பெறவுள்​ளது.

இதில் பங்​கேற்​ப​தற்​காக நெருங்​கிய உறவினர்கள் மற்​றும் முக்​கியப் பிர​முகர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி இந்​தத் திரு​மண விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், தனது மனைவி துர்கா ஸ்டா​லின், மகன் உதயநிதி ஸ்டா​லின், மரு​மகள் கிருத்​திகா உதயநிதி மற்​றும் மரு​மகன் சபரீசன் ஆகியோ​ருடன் நேற்று அதி​காலை 3.50 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானத்​தில் சென்​னை​யி​லிருந்து புறப்​பட்​டார். அவர்​கள் துபாய் வழி​யாக கிரீஸ் நாட்​டைச் சென்றடைகின்றனர்.

திரு​மண நிகழ்​வு​களை முடித்​துக்​கொண்டு, நவ.13-ம் தேதி அதி​காலை துபாய் வழி​யாக மீண்​டும் சென்னை திரும்​புவார்கள் எனத் தகவல்​கள் தெரி​விக்​கின்​றன.

இதேபோல், இந்​தத் திரு​மண விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக நடிகர் ரஜி​னிகாந்​த்தனது மகள் ஐஸ்​வர்யா ரஜி​னி காந்​துடன் சென்​னை​யி​லிருந்து கிரீஸ் புறப்​பட்​டுச் சென்​றுள்​ளார்.

இது​தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளியாகி வைரலாகி வரு​கின்​றன. கிரீஸில் நடை​பெறும் திரு​மணத்​தைத் தொடர்ந்து, வரும் நவ.21-ம் தேதி சென்​னை​யில் நட்​சத்​திர விடுதி ஒன்றில் பிர​மாண்​ட​மான திரு​மண வரவேற்பு நிகழ்ச்சி நடை​பெறவுள்​ளது.

இதில் அரசி​யல் தலை​வர்​கள், திரை​யுல​கப் பிரபலங்​கள், கிரிக்​கெட் நட்​சத்​திரங்​கள் மற்​றும் தொழிலதிபர்​கள் எனப் பலரும் கலந்​து​கொள்ள உள்​ளனர்.

இந்​தத் திரு​மணத்​தின் மூலம் ஸ்டா​லின் குடும்​பமும், ரஜி​னிகாந்​தின் குடும்​பமும் உறவு முறை​யால் இணைகின்​றன.

அதாவது மறைந்த முன்​னாள் மத்​திய அமைச்​சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன். முரசொலி மாறன், முன்னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் சகோ​தரி மக​னாவார்.

அந்த வகை​யில், ஸ்டா​லினும், கலாநிதி மாறனும் உறவினர்​கள். இத​னால் காவ்யா மாறன், ஸ்டா​லினுக்கு பேத்தி முறை​யாகிறார்.

இதேபோல் பிரபல நடிகர் ரஜி​னிகாந்​தின் மனைவி லதா ரஜி​னிகாந்​தின் சகோ​தரர் ரவிச்​சந்​தரின் மகன்​தான் இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர்.

இவ்​வாறு தமிழகத்​தின் மிகவும் பரிச்​சய​மான மு.க.ஸ்டா​லின், மாறன் மற்​றும் ரஜி​னிகாந்த் குடும்​பங்​கள் இந்​தத் திரு​மணத்​தின் மூலம் இணைகின்றன.

No comments: