News Just In

10/13/2026 06:34:00 PM

கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் உலக உளநல தின விழிப்புணர்வு செயலமர்வு

கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் உலக உளநல தின விழிப்புணர்வு செயலமர்வு



நூருல் ஹுதா உமர்

உலக உளநல தினத்தை முன்னிட்டு, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ, நிர்வாக மற்றும் ஏனைய ஊழியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வைத்தியசாலையில் நடைபெற்றது.

“வாழ்க்கை அனுபவங்களைக் கேட்போம்; உண்மையான குரல்களால் உண்மையான மாற்றத்தை உருவாக்குவோம்” என்ற இவ்வாண்டின் தொனிப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இச்செயலமர்வில், பணியிட உளநலம், மனஅழுத்த முகாமைத்துவம் மற்றும் உளநலப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் உளநலப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். சராப்டீன் மற்றும் உளநல வைத்தியர் டாக்டர் அபரகா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. பொளமி அஸ்மின், தாதிய பரிபாலகிகளான ஜி. ஜெகதீஸ்வரி, ஏ.ஜி.எப். ஹினாயா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஊழியர்களிடையே உளநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மனஅழுத்தத்தைக் கையாள்வதன் அவசியத்தையும் பணியிடங்களில் ஆரோக்கியமான உளநலச் சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


No comments: