பரபரப்பாகும் ரியாத் சர்வதேச விமான நிலையம்! நான்காவது முனையத்தை குறிவைத்து மற்றொரு தாக்குதல்
சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து இன்று (12) மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமான நிலையத்தின் நான்காவது முனையத்தை குறிவைத்த இந்த தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளர்
நேற்று (11) விமான நிலையம் தாக்கப்பட்டதில், 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள அப்ஹா நகரின் பகுதியில் இன்று அதிகாலை (12) அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன், அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக சவூதி குடிமைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா, யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் இந்த புதிய தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
10/12/2026 08:28:00 AM
Home
/
Unlabelled
/
பரபரப்பாகும் ரியாத் சர்வதேச விமான நிலையம்! நான்காவது முனையத்தை குறிவைத்து மற்றொரு தாக்குதல்
பரபரப்பாகும் ரியாத் சர்வதேச விமான நிலையம்! நான்காவது முனையத்தை குறிவைத்து மற்றொரு தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: