News Just In

10/11/2026 04:14:00 PM

சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகளுக்கு புதிய சட்ட விதிகள் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!


சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகளுக்கு புதிய சட்ட விதிகள் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!




சிறைத் தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இனிவரும் காலங்களில் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகளைச் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பீடம் அல்லது பிரிவின் பரிந்துரையின் அடிப்படையில் காவி உடையுடன் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் தொடர்பான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்தப் புதிய சட்ட விதிகள் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: