News Just In

10/12/2026 04:06:00 PM

“திடமான உள்ளங்கள்-வளமான சிறுவர்கள்” சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்

“திடமான உள்ளங்கள்-வளமான சிறுவர்கள்” சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு - வெல்லாவெளியில் பிரதேச செயலகமும் சமுர்த்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வுகள் சின்னவத்தை பொது மைதானத்தில் அண்மையில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கல்வியிலும் ஏனைய விடயங்களிலும் திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களும் முதியோர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டனர். அத்துடன் போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், போரதீவுப்பற்று பிரதேச செயலக சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், முதியோர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.


No comments: