News Just In

10/13/2026 10:52:00 AM

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச

சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச



தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று (13) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் மூன்று ஊழல் வழக்குகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்டுள்ள 'கிரிஷ்' வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச , மகன்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகள் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

No comments: