News Just In

9/28/2026 08:16:00 PM

இந்திய வீரரைப் பின் தள்ளி முதலிடம்! ஆசிய விளையாட்டில் ருமேஷ் தரங்க சாதனை!

இந்திய வீரரைப் பின் தள்ளி முதலிடம்! ஆசிய விளையாட்டில் ருமேஷ் தரங்க சாதனை!


ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுகான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க 88.55 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆசியாவின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க, இன்று (28) இலங்கை நேரப்படி பிற்பகல் 4:45 மணிக்குக் களமிறங்கி தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த போட்டியில் 85.72 மீற்றர் தூரம் எறிந்த இந்தியாவின் யஷ்வீர் சிங் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

No comments: