News Just In

7/14/2026 06:30:00 AM

“அண்ணாமலையின் அமைப்பால் தவெகவுக்கு பாதிப்பு இல்லை” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

“அண்ணாமலையின் அமைப்பால் தவெகவுக்கு பாதிப்பு இல்லை” - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



அண்​ணா​மலை​யின் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பால் தவெகவுக்கு எந்த பாதிப்​பும் இல்லை என அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் ஈரோடு மாவட்​டம் பவானி​சாகர் சட்​டப்​பேர​வைத் தொகு​திக்​குட்​பட்ட அரசு மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ் 2 பொதுத்​தேர்​வு​களில் சிறப்​பிடம் பிடித்த மாணவ, மாணவி​களுக்கு விருதுகள் வழங்​கும் விழா புன்​செய் புளி​யம்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்​றது.

வரு​வாய்த் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கலந்து கொண்​டு, மாணவ, மாணவி​களுக்கு விருதுகளை வழங்​கி​னார். இதையடுத்து அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் முதல் மாநாட்​டுக்​குச் செல்​லும் இளைஞர்​கள் வேறு. எங்​களு​டன் இருக்​கும் இளைஞர்​கள் வேறு. எங்​களு​டன் இருப்​பவர்​கள் மக்​கள் சக்​தி​யாக உள்​ளனர். தவெக​வுக்கு வாக்​களித்த பலரும் இளைஞர்​கள்.

கரூர் துயர சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு கருணை அடிப்​படை​யில் வேலை வழங்​கியதை கேள்வி கேட்​பவர்​கள், ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச் சூட்​டில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு கருணை அடிப்​படை​யில் வேலை கொடுத்​த​போது ஏன் கேள்வி கேட்​க​வில்​லை?

திமுக 96 இடங்​களில் வெற்றி பெற்றபோது காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சி​யினர் ஆதரவு கொடுத்​தனர். அவர்​கள் அமைச்​சர​வை​யில் இடம் பெற​வில்​லை. நாங்​கள் கூட்​டணி கட்​சி​யினருக்கு அமைச்​சர​வை​யில் இடம் வழங்​கி​யுள்​ளோம்.

திமுக, அதி​முக கூட்​டணி சேர்ந்​தால் என்ன தப்​பு என்று டிடிவி தினகரன் கருத்து தெரி​வித்​துள்​ளார். இரண்​டும் வட துரு​வம், தென் துரு​வ​மாக இருந்​தது அவருக்கு தெரி​யா​தா, அதி​முக​வின் கொள்​கைகளை மாற்றி பேசுபவர்​களை ஜெயலலி​தா​வின் ஆன்மா மன்​னிக்​காது. தேசிய கல்விக் கொள்​கை​யில் தமிழகத்​தின் நிலைப்​பாடு குறித்து பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் தெளி​வாக தெரி​வித்​து​விட்​டார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்

No comments: