News Just In

4/12/2026 05:54:00 AM

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு


இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு





பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்கா - ஈரான் இடையே அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்கி உள்ளது. அமெரிக்கா தரப்​பில் 15 நிபந்​தனை​களும், ஈரான் தரப்​பில் 10 நிபந்​தனை​களும் வலி​யுறுத்​தப்​பட்​டன. இதில் பல்​வேறு அம்​சங்​களில் சுமுக உடன்​பாடு ஏற்பட்​ட​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​.28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர்​நிறுத்​தத்தை அறி​வித்​தன. இந்த போர்​நிறுத்​தம் 2 வாரங்​களுக்கு மட்​டும் அமலில் இருக்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு ஏற்பாடு செய்​யப்​பட்​டது. இதற்​காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்ப்பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் வந்​தடைந்​தனர்.

ஈரான் தரப்​பில் அந்த நாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்​சி, பாது​காப்​புச் செயலர் அலி அக்​பர் அகம​தி​யான், ஈரான் மத்​திய வங்கி ஆளுநர் அப்​தோல் நாசர் ஹெம்​மாட்டி ஆகியோ​ரும் சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத்​துக்கு வந்​தனர்.

இந்​நிலை​யில், இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள செரீனா நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று பிற்​பகலில் அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் குழு​வினர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது அமெரிக்​கா​வின் 15 அம்ச திட்​டம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

‘அணு ஆயுத திட்​டத்தை ஈரான் கைவிடவேண்​டும். செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை சர்​வ​தேச அணுசக்தி முகமை​யிடம் ஒப்​படைக்க வேண்​டும். அணுசக்தி தளங்​களை ஆய்வு செய்ய அனு​ம​திக்க வேண்​டும். நீண்ட தூரம் பாயும் ஏவு​கணை​களை தயாரிக்​கக்​ கூ​டாது. ஹிஸ்​புல்​லா, ஹவுத்​தி, ஹமாஸ் உள்​ளிட்ட கிளர்ச்​சிக் குழு​வினருக்கு ஆயுதம், நிதி​யுதவி வழங்​கக் கூடாது’ என்​பது உட்பட 15 நிபந்​தனை​களை வான்ஸ் வலி​யுறுத்​தி​னார்.

No comments: