News Just In

4/23/2026 05:20:00 PM

கிழக்கு மாகாணத்தில் காணியை இழந்தவர்களின் மாநாடு!

கிழக்கு மாகாணத்தில் காணியை இழந்தவர்களின் மாநாடு!



கிழக்கு மாகாணத்தில் தங்களது குடியிருப்பு, ஜீவனோபாய மற்றும் மத வழிபாட்டு இடங்கள் அரசின் 7 வகையான பொறி முறைகள் ஊடாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காணிகளை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு காணியை இழந்த மக்கள் பல ஆண்டு காலமாக முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் இன்றுவரை தங்களுக்கான காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய தினம்(23) கிழக்கு மாகணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணிகளை இழந்த மக்கள் தங்களது காணிகளை இலங்கை அரசு மீள வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வோதய மண்டபத்தில் ஒன்று கூடி தாங்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகளை முன் வைத்தத்துடன், இலங்கை ஜனாதிபதிக்கும் மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு காணி தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் காணி அபகரிப்புத் தொடர்பான ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. இம் மாநாட்டினை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது

No comments: