News Just In

4/22/2026 10:59:00 AM

மெல்ல மெல்ல தணியும் வெப்பம் - இன்றும் பிற்பகலில் மழை

மெல்ல மெல்ல தணியும் வெப்பம் - இன்றும் பிற்பகலில் மழை



நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறித்த விடயம் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

20 ஆம் திகதி முதல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றும் குறிப்பிட்ட நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக ஹட்டன், நுவரெலியா, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி போன்ற பல பகுதிகளில் ஒரு சில நிமிடங்களில் மழை கொட்டித்தீர்த்தது.

வெப்பத்தின் கோரத்தை தாங்க முடியாமல் அல்லோலப்படும் மக்கள் கடந்த இரு நாள்களாக ஒரு சில நிமிடமேனும் மழையில் குளிர்ந்துள்ளனர்.

No comments: