News Just In

2/08/2026 05:12:00 AM

மட்டக்களப்பில் 11 வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பில் 11 வெதுப்பக உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை




மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 11 வெதுப்பக முச்சக்கர வண்டிகள் தனிநபர் சுகாதாரம், மருத்துவ சான்றிதழ் இன்றிப் பயணித்ததால் பொதுச் சுகாதாரர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் இடம்பெற்று, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறியதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: