News Just In

10/13/2025 01:12:00 PM

யாழில் மற்றுமொரு வித்தியாவா? சங்குபிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் தகவல்!



யாழில் மற்றுமொரு வித்தியாவா? சங்குபிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில்  தகவல்!

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(12) பெண்ணின் சடலம் சங்குபிட்டி பாலத்திற்கு அருகே கரையொதுங்கியுள்ளது.

18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் யுவதி பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகம் எரிக்கப்பட்ட நிலையில் யுவதியின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சந்தேகம் இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்க உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில், மற்றுமொரு புங்குடுதீவு மாணவி நித்தியாவுக்கு ஏற்பட்ட சம்பவம்போல இதுவும் அரங்கேறியுள்ளதா என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.

No comments: