News Just In

8/12/2025 05:27:00 PM

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் முதலிடம்


நூருல் ஹுதா உமர்

1971 யில் மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை (2025) 54 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது.

மஹ்மூத் 54 வருட கால பதிவுகளில் முதற்தடவையாக இவ் ஆண்டின் 34 "9A" விசேட சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை மாத்திரம் அல்லாமல் அண்மையில் வெளியான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தரப்படுத்தலின் முஸ்லிம் பாடசாலைகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று முன்னிலையில் திகழ்கின்றது.

இவ் வரலாறு சாதனைக்கு பின்னணியில் இருந்து இரண்டு வருடங்களாக நேரம், காலம் பாராது தன்னை முழுமையாக அர்ப்பணித்து வழங்கப்பட்ட அதிபர் ஆசனத்தை, கல்லூரியையும் அழகு பார்க்கின்ற கல்லூரியின் பழைய மாணவி, தற்போதைய 17வது அதிபரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முதலாவது பெண் இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) தரத்தை சேர்ந்த அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் சேவையானது நினைவு கூறப்பட வேண்டிய வரலாற்று தடயங்களாகும்.

முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் கடமையேற்று எதிர்வரும் 25.ஆகஸ்ட், 2025 இரண்டு வருட பூர்த்தியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவிகளை வாழ்த்தி பாராட்டுவதோடு, இச் சாதனையை புரிவதற்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், இதற்காக மாணவர்களை வழிப்படுத்தி அர்பணிப்புடன் அரும்பணி புரிந்த தரம் 11 பிரிவின் பகுதி தலைவர் ஏ.ஆர்.எம். நளீம், உதவி பகுதித் தலைவி ஐ. சிபா தெளபீக், தரம் 06 தொடக்கம் 09 வரையாக வழிப்படுத்திய பகுதித் தலைவர்கள், அப்பிரிவின் வகுப்பாசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்கள், பிரதி, உதவி அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், உளவியல் துறை விரிவுரையாளர்கள், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விஷேடமாக இந்த கல்லூரியில் பழைய மாணவியாக, ஆசிரியர், உதவி அதிபர், கோட்டக்கல்வி அதிகாரியாக பல பரிமாணங்களில் பணியாற்றி தமது அதிபர் சேவை பொறுப்பேற்று மஹ்மூத் கல்வி வளர்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையில் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.

No comments: