News Just In

7/21/2025 06:07:00 PM

பங்களாதேஷ் விமான விபத்து : இதுவரை 19 பேர் பலி.. பலர் ஆபத்தான நிலையில் .

பங்களாதேஷ் விமான விபத்து : இதுவரை 19 பேர் பலி.. பலர் ஆபத்தான நிலையில்


பங்களாதேஷில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரா - டயபாரியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதி விமானம் மோதி வெடித்து தீப்பிடித்துள்ளது.

பயிற்சி விமானம் மதியம் 1:06 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான F-7 BGI விமானம் விமானப்படைக்கு சொந்தமானது என்பதை பங்காளதேஷ் இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.பங்களாதேஷில், விமானப்படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்களானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், 100இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: