News Just In

5/08/2025 05:08:00 PM

மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் !

மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் !


நூருல் ஹுதா உமர்

தரம் 6 மற்றும் 7 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு HPV தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் இன்று 2025.05.08 இடம் பெற்றது.

இதன்போது 1 தொடக்கம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அப்பாடசாலையின் ஆசிரியர்களுக்கு தொற்றா நோய் தடுப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இச் செயற்பாடானது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: