News Just In

4/22/2025 01:22:00 PM

பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி; வெளியான தகவல்

பல படுகொலைகளை அரங்கேற்றிய பிள்ளையானின் விசுவாசி; வெளியான தகவல்




கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என கூறப்படுகின்றது.

அதோடு இவர் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவர் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவர் என்றும், இன்னும் பலர் இருக்கின்றார்கள் என்றும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள் படு கொலை செய்யப்பட்டு மறைமுகமாக புதைக்கப்பட்டு மனித உடல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக சரியான விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் பல உண்மைகள் கண்டறியப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இவரரை போன்றி பலர் , பிள்ளையானுக்கு உறுதுணையாக இருந்த பலர் இன்னும் சமூகத்தில் நடமாடுவதாகவும் அவர்களையும் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் மட்டக்களப்பு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: