News Just In

4/18/2025 10:39:00 AM

பிள்ளையானைத் தொடர்ந்து சரணடையவுள்ள நபர் : பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு தகவல்!

பிள்ளையானைத் தொடர்ந்து சரணடையவுள்ள நபர் : பாதுகாப்பு அமைச்சர் பரபரப்பு தகவல்




கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான்  எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நெருக்கமான நண்பர் ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே ஆனந்த விஜேபால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கம்மன்பில  - பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின்போது அருகில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்று ஆனந்த விஜேபால மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: