News Just In

2/26/2025 11:25:00 AM

செவ்வந்தியின் உருவத்தில் இருவர் : பொலிஸார் அதிரடிக் கைது!

செவ்வந்தியின் உருவத்தில் இருவர் : பொலிஸார் அதிரடிக் கைது



கணேமுல்ல சஞ்ஜீவவின்  கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைதாகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் கையடக்க தொலைப்பேசியைப் பரிசோதனை செய்வதற்காக நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெற்று அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: