யாழில் விபத்துக்குள்ளான இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் அனுமதி
நாடாளுமன்றஉறுப்பினர்இளங்குமரன்விபத்தில்சிக்கிபடுகாயமடைந்துள்ளார்.சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இன்றையதினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: