மட்டக்களப்பில் யானைகளை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்.
நேற்றைய தினம் 21.02.2025 என்னால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது. மிக முக்கியமான ஒரு பிரச்சினை இந்த சபையிலே ஒத்திவைக்கும் பிரேரணை ஊடாக என்னால் முன்வைக்கப்பட்டது.
இதிலே மிகவும் முக்கியமாக பேச வேண்டும் என நான் எதிர்பார்த்தது, மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி வந்த புகையிரதமே மோதியுள்ளது. இது நேற்று இன்று நடந்த ஒரு பிரச்சினை இல்லை. இது காலாகாலமாக நடந்துக் கொண்டிருக்கும்ஒரு பிரச்சினை. அதுமட்டுமல்ல மட்டக்களப்பிலே யானைகளை கட்டுப்படுத்துவதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. யானை வெடி மட்டக்களப்பிலே இல்லை. அறுவடை செய்யும் காலப்பகுதியில் யானைகள் பெருமளவு காடுகளை அழித்துக் கொண்டு போகும் போது நாங்கள் நேரடியாக சென்று நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம்N கட்ட போது யானை வெடி இல்லை.ஜனவரி மாதம் டென்டர் போட்ட பின்னரே யானை வெடி தரலாம் என்று கூறுகின்றனர். இதுதான்இன்று நாட்டினுடைய நிலைமை. கடந்த ஆட்சிகாலத்திலும் எத்தனைஇலட்சம் யானை வேலி அமைப்பதாக கூறினார்கள். ஆனால் மட்டக்களப்பிலே எந்த யானை வேலியும் அமைக்கவில்லை. வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை நாம் பாராட்ட வேண்டும். கடந்த காலத்திலே மட்டக்களப்பிலே வனவவிலங்கு அதிகாரி ஒருவர் யானைமிதித்து உயிரிழந்தார். கடந்த ஆண்டுக்குள் இது நடைபெற்று இருந்தது. நான் இந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம், நீங்கள் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் தரப்பு. நீங்கள் இன்றும் ஒத்திவைக்கும் பிரேரணை ஊடாக நீங்கள் கூறும் விடயங்களை பார்த்தால் நீங்கள் ஏதோ எதிர்க்கட்சியில் இருப்பதை போன்று தான் தெரிகிறது. யானை வேரி அமைப்பது தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாம் ஒரு தீர்மானத்தை எடுத்து அனுப்பினால் நீங்கள் அதனை நடைமுறைபடுத்தலாமா இல்லையா என்பதையே இந்த சபையில் சொல்ல வேண்டும். எமது சபாநாயகரும்இருப்பதால் நான் இதை கூற வேண்டும்.
பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றை முன்வைப்பதன் ஊடாக ஒரு விடயத்திற்கான தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம். ஒரு அவசர விடயம் தொடர்பில் தீர்வை பெறவே ஒத்திவைக்கும் பிரேரணை முன்வைக்கப்படுகிறது. ஆனால் நேற்று அம்பாறை மதுபானசாலை தொடர்பில் முன்வைத்த விடயத்திற்கு அமைச்சர் அரசியல் மேடையில் மாத்திரம் பதிலளித்துவிட்டு வருகிறார். அது குறித்த நாம் மிகவும் கவலை அடைகிறோம். இன்று அமைச்சர்எவ்வாறான பதிலை முன்வைப்பார் என்று தெரியாது. ஆனால் பதில் குறித்து தெளிவுபடுத்துவதற்கும் பயம். யானை வெடி மட்டக்களப்பிலே இல்லை. ஜனவரி மாதம் டென்டர் போட்ட பின்னரே யானை வெடி தரலாம் என்று கூறுகின்றனர். ஒத்திவைக்கும் பிரேரணை ஒன்றை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். நிங்கள் தான் ஆட்சியில் இருக்கின்றீர்கள். புகையிரத தண்டவாளத்தில் யானைகள் வருமாயின் தண்டவாளத்தில் சென்சர் பொருத்துவோம். யானைகள் வருவதை முன்கூட்டியே அறிந்துக் கொள்வோம். அதைவிடுத்து எதிர்க்கட்சியின் கொலை என பேசிக்கொண்டிருப்பது இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாத விடயமாகும். ஆளுங்கட்சிஇதை புரிந்துக் கொள்ள வேண்டும். அரசியல் மேடைகளில் பேசிக்கொண்டிருந்தது போல் தொடர்ந்து கதைத்து கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஆளுங்கட்சி. நேற்றைய ஒத்திவைக்கும் பிரேரணையின் போதான எனது அனுபவத்தினாலேயே நான் இவ்வாறு பேசுகின்றேன். நீங்கள் ஆளுங்கட்சி தற்போது இருக்கின்றீர்கள் என்றால், அதில் எமக்கும் பங்குண்டு. நாம் இன்று எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாமும் போராடினோம். நாமும் கோ ஹோம்கோட்டா என கூறினோம். அதனாலேயே உங்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது. நாங்கள் இன்று எதிர்க்கட்சியில் இருப்பதால் எம்மை வேடிக்கையாக பார்க்க வேண்டாம்.
யானை பிரச்சினை குறித்து சபையில் பிரேரணை முன்வைத்தால் அது தொடர்பில் பயனுள்ள கருத்துக்களை முன்வைக்குமாறு கூறுங்கள் கௌரவ சபாநாயகர் அவர்களே. அதைவிடுத்து எதிர்க்கட்சி கொலை செய்தது என கூறுவது தேவையற்ற விடயம். சென்சர் பொருத்துவோம், அல்லது ஃபோகஸ் லைட்களை பொருத்துவோம் என கருத்து தெரிவிக்க வேண்டும். இல்லையேல் மக்களும் வெறுத்துவிடுவர். அம்பாறை மதுபானசாலை இன்னும் திறக்கப்படவில்லை. அது திறக்கப்படுவதற்கு முன்னர்அதனை மூட நடவடிக்கை எடுப்போம் என நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அமைச்சர் அவர் எழுதிக் கொண்டு வந்திருந்ததை கூறிவிட்டு பெரியதனமாக இருக்கிறார். அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி இல்லை என்றால் இந்த அமைச்சர்களும் இல்லை ஒருவரும் இல்லை. அதனை நினைவில் கொள்ளுங்கள். அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியின் முகத்திற்காகவே மக்கள் வாக்களித்தனர். ஜனாதிபதி அவர்கள் எனக்கும் நிறைய ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பெரும்பான்மை வெற்றி பெற்ற அமைச்சர்கள் என்ற தலைக்கனத்துடன் இல்லாது. இவ்விடயங்களுக்கு பாராட்டத்தக்க சிறந்த யோசனைகளை முன்வையுங்கள். நாங்களும் சிறந்த யோசனை முன்வைக்க தயாராக இருக்கிறோம்.
No comments: