News Just In

2/04/2025 11:47:00 AM

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் - கிளிநொச்சியில் ஆரம்பமான போராட்டம்!

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் - கிளிநொச்சியில் ஆரம்பமான போராட்டம்

இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப் போராட்டத்தில்,

பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




No comments: