News Just In

1/30/2025 08:35:00 AM

மாவை சேனாதிராஜா காலமானார் !ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியை!

மாவை சேனாதிராஜா காலமானார் - புகழுடலை பொறுப்பேற்ற சிறீதரன்




இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 வது வயதில் நேற்று இரவு காலமானார்.

குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில்

திரு மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்அவரது மரணம் அறிந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்படி மாவை சேனாதிராஜாவின் புகழுடலை குடும்பத்தாரின் அனுமதிக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 02/02/2025, ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: