வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளி க்கு மேல் பெற்று சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
2024 தரம் 5 புலமைப் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 59 மாணவர்களில் 49 மாணவர்கள் 70 க்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி (சித்தி வீதம் 82.45) சித்தி அடைந்துள்ளனர்.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீனின் சிறப்பு வழிகாட்டலின் கீழ் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பயிற்சி ஊக்குவிப்பினால் இம்முறை அதிக மாணவர்கள் சித்தி அடைந்ததுடன் கடந்த காலங்களில் கோட்டமட்ட சாதனைகளையும் இப்பாடசாலை படைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
No comments: