News Just In

1/06/2025 11:30:00 AM

10ம் திகதிக்கு முன் எரிபொருள் மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானம்!


10ம் திகதிக்கு முன் எரிபொருள் மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானம்!




நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, குறித்த மானியங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

காலி - ஹபராதுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊட்டங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறு தொழிலாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கும் நெடுநாள் படகு உரிமையாளர்களுக்கும் குறித்த எரிபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மீன்பிடியில் ஈடுபடுபவர்களின் உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறித்த விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் என கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்

No comments: