News Just In

12/14/2024 03:43:00 PM

சுமந்திரனை மட்டக்களப்பிற்கு அழைப்பதை தவிர்த்த சாணக்கியன்!

சுமந்திரனை மட்டக்களப்பிற்கு அழைப்பதை தவிர்த்த சாணக்கியன்



தற்போது சுமந்திரனுக்காக பேசும் சாணக்கியன், மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களில் அவரை தவிர்ததனாலேயே கணிசமான வாக்குகளினால் வெற்றிப்பெற்றார் என தமிழரசுக் கட்சியின்(ITAK) உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்தார்.

 நிகழ்சி  ஒன்றினில்  கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சாணக்கியன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகே சுமந்திரனின் தோல்வி தமிழரசுக்கட்சியின் தோல்வி என்று பேசுகின்றார்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், சுமந்திரனுடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட்டு வந்தால் அடுத்த முறை அவர் ஜெயிப்பது சந்தேகமாக கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுமந்திரன் என்ற ஒருவரை நம்பி மட்டுமா தமிழரசுகட்சி உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: