
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(13.12.2024) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டங்கள் விவசாய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் கால்நடை மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க கேட்ஸ் அறக்கட்டளை சம்மதித்துள்ளது.
தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அறக்கட்டளையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளை உணர்ந்து ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கேட்ஸ் அறக்கட்டளை உறுதியளித்துள்ளது
No comments: