
மட்டக்களப்பு, செங்கலடி கரடியனாறு பகுதியில் ஜீப் மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்ததோடு, ஜீப் சாரதியான கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைதான பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments: