News Just In

12/09/2024 10:48:00 AM

தமிழ் எம்.பி.யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு!

தமிழ் எம்.பி.யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு!




அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (8) பிற்பகல் கொழும்பு - புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

No comments: