நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
12/09/2024 05:40:00 PM
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: