மட்டக்களப்பு வேட்பாளர் வனிதாசெல்லப்பெருமாள்
(சிஹாரா லத்தீப்)
இதுவரைகாலமும் இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகம் செய்து வந்தவர்கள் செய்த பெருமளவு ஊழல்கள் இன்று ஜனாதிபதி சகோதரர் அனுரதிசா நாயக்கவின் ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் திருமதி செல்லப்பா தெரிவித்தார் மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள்சக்தியின் பிரசார கருத்தரங்கில் சிறப்புரையாற்று கையில் இவ்வாறு இந்த கருத்தை வெளியிட்டார்.
வேட்பாளர் வனிதாசெல்லப்பா தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் இதுவரை காலமும் நமது நாட்டு மக்கள் ஊழல்வாதிகளே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தார்கள் இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கவில்லை
அவர்கள் தம்மை வளர்த்துக் கொண்டார்கள் பொருளாதாரம் தேடிக்கொண்டார்கள் ஆனால் எமது மக்களோ இன்று வாழ்க்கைச் செலவு பொருளாதார நெருக்கடி மத்தியில் அல்லல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;- இந்த நாட்டில் பெண் சமூகத்தினர் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனுபவித்து வரும் கஷ்ட நஷ்டங்களை தோழர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நன்கு அறிவார் இதன் அடிப்படையில் எதிர்வரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பாராளுமன்ற அமையப்பெற்றதும் இந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு விதமான மான நலன் திட்டங்களை அமுல் நடத்த உள்ளார்.
வீண் விரயங்கள் ஒழிக்கப்பட்டு சாதி இன மத பேதமற்ற நாட்டு மக்களை இந்த நாட்டில் உருவாக்கி சகலரும் சம உரிமை உடன் வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே ஜனாதிபதிஅநுர குமாரவின் நோக்கமாகும் என வேட்பாளர் வனிதாமேலும் தெரிவித்தார்.
எனவே ஊழலற்ற நீதிநியாயம் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை தெரிவு செய்ய எமது உறவுகள் முன்வரவேண்டும் முன்வாருங்கள்
No comments: