News Just In

11/25/2024 11:39:00 AM

மட்டக்களப்பில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஹெல்விற்றாஸ் சர்வதேச தன்னார்வ அபிவிருத்தி நிறுவனத்தினால் மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹெல்விற்றாஸ் சர்வதேச தன்னார்வ அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஹெல்விற்றாஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் காவியா சுயதொழில் அபிவிருத்தி சங்கமும் மட்டக்களப்பு கூட்டுறவு இளைஞர் அபிவிருத்தி சங்கமும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.

மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தி சிறந்த சந்தை வாய்ப்பை வழங்குவதற்காக இந்நிலையம் செயற்படவுள்ளதாகவும் மாவட்டத்தில் 52 சுயதொழில் உற்பத்தி குழுக்களை அமைத்து தொழில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், சுய தொழில் உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றது இதனை தீர்த்து வைப்பதற்கான நிலையமாக இந்நிலையம் செயற்படவுள்ளதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச உதவிச் செயலாளர் சுபா சதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் நிஷாந்தினி அருள்மொழி, ஹெல்விற்றாஸ் நிறுவன திட்ட முகாமையாளர் ரஞ்சித் விஜகோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: