News Just In

11/19/2024 08:25:00 AM

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் தமிழர் பகுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்!

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் தமிழர் பகுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்


புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் யாழ். (Jaffna) வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றிலிருந்து (18) பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அநுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இந்த உத்தரவு இராணுவ தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது

No comments: