News Just In

11/22/2024 08:56:00 AM

இன்றும் சிஐடியில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு!

இன்றும் சிஐடியில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்குஅழைப்பு!




பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) இரண்டாவது நாளாக இன்றைய தினம் (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா (Asath Maulana) வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

அதில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இரண்டாவது நாளாகவும் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நேற்று முன்தினம் (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான பிள்ளையான், சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அத்துடன் மேலதிக வாக்குமூலம் பெறுவதற்காக இன்று முற்பகல் 9 மணியளவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: