News Just In

11/26/2024 12:00:00 PM

மட்டக்களப்பில் மினி சூறாவளி! தூக்கி வீசப்பட்ட படகுகள் - 7 வீடுகள் சேதம்


மட்டக்களப்பில் மினி சூறாவளி! தூக்கி வீசப்பட்ட படகுகள் - 7 வீடுகள் சேதம்



மட்டக்களப்பு - வாகரை பிரதேச சபைக்குட்பட்ட மாங்கேனி  பகுதியில் நேற்றிரவு மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த மினி சூறாவளியில்,

அப்பகுதியிலுள்ள 'லிவிங் கிறிஸ்டியன் அசம்பிலி' எனப்படும் தேவாலயம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இவ்வனர்த்தத்தில் 7 வீடுகள் பாதிப்படைந்துள்ளது.

கடற்கரையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு படகுகள் கரைக்கு அப்பால் தூக்கியெறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments: