News Just In

11/08/2024 06:09:00 PM

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை




வங்காள விரிகுடாவில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும்,

இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

No comments: