தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்பிலும் உரையாட வேண்டிய அவசியம் தமிழரசு கட்சிக்கு நிச்சயமாக இருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - பாட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் இன்று (20.10.2024) மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரைகளின் போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"தமிழர்களாகிய நாம் விலை போகாத தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க இருப்பதாக களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் என்னிடம் நேரில் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், இந்த பொதுத் தேர்தலில் பல்வேறுபட்டவர்கள், பல்வேறு நோக்கங்களுக்காகவும், சுய நோக்கங்களுக்காகவும், களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள், எனவே மக்கள் தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
No comments: