முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சடலமாக மீட்பு! சுட்டுக் கொல்லப்பட்டாரா?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குறித்த நபர் தாக்கப்பட்டு இருந்த இடத்தில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்துள்ளாரா என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: