News Just In

10/21/2024 08:05:00 AM

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு




மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று (20.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு நீரிழிவு நோய் காணப்படுவதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தனக்கு தானே மண்ணென்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

No comments: