(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப மீலாதுன் நபி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் சமய கலாசார குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் மெளலவி.எம்.ஆதம்பாவா அவர்கள் விஷேட உரை நிகழ்த்தினார்.
இந்நிகழவில் பிரதி அதிபர்எஸ்.எம்.சுஜான்,உதவி அதிபர் எம்.எப்.றிஸ்வி ஹாத்தீம் உட்பட பகுதித் தலைவர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்..மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
No comments: